புதியவை

எங்களைப்பற்றி

Tambaram Astrologer, Vattiyam Echoor - Tambaram  Balu Sarmaஸ்ரீ காஞ்சி மாவட்டம், எச்சூர் மற்றும் மதுராந்தகம் கருங்குழி கிராமத்தில் வாழ்ந்த எனது மூதாதையர்கள் புரோஹிதம் மற்றும் ஜோதிஷத்தில் கோலோச்சினர். அந்தவழியில் வந்த எனது கொள்ளு பாட்டனார் "கௌமாரம்" - கௌன்டின்யஸ்ய கோத்ரம் - ஜோதிஷ வித்வான் வட்டியம். செங்கல்வராய சர்மா அவர்கள் ஓலைச்சுவடிகளில் பஞ்சாங்கத்தை கணித்து பதித்தார்.

அவருக்கு பின்னர் பாட்டனார் ஸ்ரீ. சாம்பமூர்த்தி சர்மா அவர்கள் தாளில் எழுதி சூர்ய சித்தாந்த பஞ்சாங்கத்தை பயன்படுத்தினார், அவரை தொடர்ந்து எனது தகப்பனார் ஸ்ரீ. பாலசுப்ரமண்யா சர்மா அவர்கள் பழைய தாம்பரத்தில் கிராம புரோஹிதராக இருந்துக்கொண்டு தனது ஜோதிஷ பயன்பாட்டிற்காக திருக்கணித முறை் பஞ்சாங்கத்தை கணித்து வந்தார். மேலும் சிறிய அளவில் அவரால் வெளயிடப்பட்டு வந்த ஸ்ரீ தணிகை பஞ்சாங்கத்தை பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதராக இருக்கின்ற அடியேன் திருக்கணித முறையில் கணித்து புதுப்பித்து வெளியிடுகிறேன்

எனது தாயார்வழி பெரியம்மா ஸ்ரீமதி. லலிதாம்மாள் (மணப்பாறை. திவான். துரைசாமி அய்யர் அவர்கள் மகள்) அவர்கள் மூலமாக திருக் வானசாஸ்திர கணிதமும், மருத்துவக்குடி பஞ்சாங்க கணிதக்ஞர் ஸ்ரீமான். சுப்ரமன்ய அய்யர் அவர்களிடம் வாக்கிய சித்தாந்த முறையும் கற்று அறிந்து அதன் பலனாக இந்த திருக் சிந்தாந்த முறை பஞ்சாங்கத்தை வெளியிடுகிறேன்.

இந்த பஞ்சாங்கத்தில் இந்திய அரசின் வானசாஸ்திர துறையின் (Positional Astronomy Centre, Meteorological Dept., Govt Of India)மிக துல்லியமான தகவல்களை முறைப்படி அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகிறது

பஞ்சாங்கத்தை செம்மைப்படுத்த தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்

Echoor Temple, Sunguvar Chatram, Sri Perumanthur, Vallakottai, Oragadam, எச்சூர், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெருமந்தூர், வாலாஜாபாத், வல்லக்கோட்டை, கோவில், கோயில்

ஸ்ரீ பெருமந்தூர், சுங்குவார்சத்திரம், வல்லக்கோட்டை, எச்சூர் கிராம கோவில்கள், பெருமாள் கோவில், ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத ஆதிகேசவ பெருமாள், சிவன் கோவில், மரகதாம்பாள் ஸமேத மார்கண்டேயர், கிராம தெய்வம் காளிகாம்பாள், எல்லை தெய்வம் படவேட்டம்மன், sri perumandhur, sunguvarchatiram, vallakottai, Echoor