முழுகாப்புரிமை - பாலு சரவண சர்மா -ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
வாக்கிய பஞ்சாங்க பிழையும் - புதன் கோள் சூரிய விட்டம் கடவும்

வாக்கியபஞ்சாங்கமா? திருக்கணிதமா? பிழைகள்

எதிர் வரும் 9.5.2016 திங்கள் அன்று மாலை உலகமே எதிர்பார்கும் புதன் கோள் கடவு நிகழ்வானது வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி நிகழாது...! அறிவியலுக்கும் பாரம்பரியத்திற்கும் ஒரு சவாலான விஷயமாக இது திகழ்கிறது

சூரியனும் புதனும் 0 பாகையில் இணையும் நிலையில் வாக்கிய பஞ்சாங்க கணிதத்தில் 16 பாகை சூரியனை விட்டு புதன் விலகியும் வக்கிரகதியில் இருப்பது பெரும் மூலகணித பிழையாகும். இதனடிப்படையில் அன்று புதன் சூரிய விட்டத்தை கடக்காது என்று கூறினால் அறிவார்த்த மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் கண்களால் அன்று வானியில் நிகழ்வை கண்டு வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள தகவல் தவறு என்று உணர்வார்கள்.

இப்படி ஒரு பிழையான வாக்கிய முறை பஞ்சாங்கத்தை வைத்து பலன் சொல்லுவதும், பண்டிகைகள், முன்னோர் வழிபாட்டின் மிகமுக்கிய சிரார்தம்(தெவசம்) போன்ற நாட்களை தவறான நாட்களில் கடைபிடப்பதும் சரியல்ல.

பலவருடங்களாகவே வாக்கிய பஞ்சாங்கம் பெரும் குறைபாடுகளுடன் கணிதப்பிழையுடன் திகழ்கிறது. ஆயினும் சிலர் இதை ஏற்க மறுத்தும் இதுவே சரியானது என்று வாதிடுகிறார்கள். நம்நோக்கம் வாக்கிய பஞ்சாங்கத்தை குறைகூறுவதல்ல அதில் உள்ள கணித சூத்திரங்கள் காலத்திற்கேற்ப திருத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதால் தற்பொழுது பெரும் பிழையான பஞ்சாங்கமாக இது திகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவாகும்.

நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் துல்லியமாக இராகெட் ஏவும் தொழில் நுட்பம் அறிந்து வானசாஸ்திரத்தில் மேலோங்கிய நமது தேசத்தில் பிழைகளுடன் வானியல் தகவல்களுடன் பஞ்சாங்கம் வருவது வருத்தமான விஷயமாகும். அதீத கணித அறிவாளிகளும், கணித மேதை இராமானுஜன் பிறந்த இந்த மண்ணில் வாக்கிய பஞ்சாங்த்தின் மூலகணித பிழையை சீர்திருத்தம் செய்திட யாரும்முன் வரவில்லை என்பதுதான் உண்மை

திருக்கணிதம் பல திருத்தங்களை உள்வாங்கிக்கொண்டு மிகவும் துல்லியமானதாக திகழ்கிறது. அதுபோல் வாக்கிய பஞ்சாங்கமும் திருத்தம் செய்ய அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். காஞ்சி பரமாச்சாரியார் இந்த பிழைகளை அறிந்து நன்கு ஆய்வு செய்த பின்னர் " திருக்கணிதமே சரியானது" என முடிவுக்கு வந்த ஸ்ரீசங்கரமடத்தின் பூஜை அனுஷ்டானங்களுக்கு திருக்கணிதத்தையே பயன்படுத்த உத்திரவிட்டு இன்று வரை ஸ்ரீமடம் பஞ்சாங்கம் திருக்கணித முறையில் தான் வெளிவருகிறது.

தமிழகம் தவிற மற்ற மாநிலங்களும் அறிவியல் முறைப்படியான திருக்கணிதத்தை ஏற்று நடைமுறைப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மட்டும் தான் இந்த வாக்கிய பஞ்சாங்கம்இன்றளவும் பின்பற்றப்படுகிறது

திருக்கணிதம் பஞ்சாங்க தகவல்படி அன்று புதன்கோள் சூரிய விட்டத்தை இந்திய நேரப்படி மாலை 4:42 மணி முதல் இரவு 12:12 மணி வரை கடப்பார். இந்த நேரத்தில்சூரியன் தெரியும் இடங்களில் இந்த வானியல் நிகழ்வை காணலாம்.

திருக்கணித முறைப்படி கணித்த தகவல் புள்ளிவிபரம் மற்றும் வரைபடம் கீழே தரப்பட்டுள்ளது

Mercury Transit, Chennai, India, Nasa, ISRO, IAU, Tambaram Astronomy Club, 9th May 2016, Thiruthanigai Panchangam, Vakya Panchangam, Eclipse, Maths, Calculation, Planetry Position, IAS, Birla Planetarium, பிர்லா பிளானட்டோரியம், தாம்பரம் வானியல் கழகம், சென்னை, 45, இந்தியா, வானியல் துறை, நேரடி ஒளிபரப்பு, அறிவியலாளர்கள், விஞ்ஞானி, தொலைநோக்கி, ஜோதிடர், Astrologer, Prohithar, Panchangam, Almanac

முதல் தொடர்பு 11:12 UTC, இரண்டாம் தொடர்பு 11:15 UTC, உச்சநிலை 14:57 UTC,மூன்றாம் நிலை 18:39 UTC, முடிவுநிலை 18:42 UTC

Mercury Transit, Chennai, India, Nasa, ISRO, IAU, Tambaram Astronomy Club, 9th May 2016, Thiruthanigai Panchangam, Vakya Panchangam, Eclipse, Maths, Calculation, Planetry Position, IAS, Birla Planetarium, பிர்லா பிளானட்டோரியம், தாம்பரம் வானியல் கழகம், சென்னை, 45, இந்தியா, வானியல் துறை, நேரடி ஒளிபரப்பு, அறிவியலாளர்கள், விஞ்ஞானி, தொலைநோக்கி, ஜோதிடர், Astrologer, Prohithar, Panchangam, Almanac

முழுகாப்புரிமை - ஸ்ரீதணிகைபஞ்சாங்கம்
பாலு சரவண சர்மா
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர் - பஞ்சாங்க கணிதம், தொலைபேசி எண்: 98403 69677 மின்னஞ்சல்: prohithar@gmail.com
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com | www.thanigaipanchangam.com