Aries, Taurus, Gemini,  Cancer, Leo,Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces, Zodiac Sign, Zodiac Sign, Raasi Chandrashtamam dates, ராசி, மன்மத, துன்முகி, சந்திராஷ்டம நாட்கள், தினங்கள், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், www.thanigaipanchangam.com, www.prohithar.com, Tambaram Astrologer, 2015, 2016, 2017, 2018

| முகப்பு |
சந்திராஷ்டமம் சிறப்பு பக்கம்
அனைத்து தகவல்களும் காப்பிரைட் உரிமை உடையது - வேறு இணையத்தில் வெளியிட அனுமதி இல்லை

காப்புரிமை, காப்பிரைட், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், சந்திராஷ்டமம், Heyvilambi Panchangam, Dunmugi Panchangam, Raasi Palan, Varusha Palan

சந்திராஷ்டமம் விளக்கம்

சந்திராஷ்டம கணிதம்

சந்திராஷ்ட நட்சத்திரங்கள் (17ம் நட்சத்திரம்) மற்றும் சந்திராஷ்டம இராசிகள்

மன்மத(2015-16) வருட சந்திராஷ்டம தினங்கள்
Manmatha Varusha Chandrashtama Dinam

2016ம் ஆங்கில வருட சந்திராஷ்டம தினங்கள்

துன்முகி (2016-17)வருட சந்திராஷ்டம தினங்கள்
Dunmugi Varusha Chandrashtama Dinam

2017ம் ஆங்கில வருட சந்திராஷ்டம தினங்கள்

ஹேவிளம்பி(2017-18) வருட சந்திராஷ்ட தினங்கள்
Heyvalambi Varusha Chandrashtama Dinam


சந்திராஷ்டம விளக்கம்:

chandrashtama rasi இன்று சந்திராஷ்டமம் இராசி, நட்சத்திரம், சந்திராஷ்டமம் என்றால் என்ன? விளக்கம் சந்திராஷ்டமம் தோஷம் விளக்கம், நட்சத்திரம், பரிகாரம், இராசி

சந்திரன் + அஷ்டமம்(எட்டு) = சந்திராஷ்டமம்
பொருள்: சந்திரன் நின்ற ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் இருப்பாதாகும்

சந்திரன் பூமியை 27.322 நாட்களில் வலம் வரும் சுழற்சி காலத்தில் 12 இராசி மண்டலங்களையும் கடக்கும். சந்திரன் சஞ்சரிக்கும் மண்டலத்தில் இருந்து பின்புறத்தில் எட்டாம் இராசி மண்டலத்தில் பிறந்தவர்களுக்கு தொல்லைதரும் காலமாகும்.

சந்திராஷ்டமம் என்பது ஒருவரின் பிறந்த இராசியான “ஜென்ம ராசிக்கு” எட்டாம் இராசி (210 பாகை முதல் 240 பாகை கோண அளவு) மண்டலத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமான இரண்டே கால் நாட்களாகும். இங்கே கோசார சந்திரனை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். ஃஇராசிக்கட்டத்தில் உள்ள சந்திர நிலை.

ஒரு இராசி என்றால்: 30 பாகை கோண அளவு, 2 ¼ நட்சத்திரங்கள், 9 பாதங்கள் உள்ளடக்கிய மண்டலமாகும்

சந்திராஷ்ட நட்சத்திரம்:
ஒருவரின் ஜன்ம நட்சத்திரத்திற்கு 17ம் நட்சத்திர (213 20 முதல் 226 40 வரை)காலம் சந்திராஷ்டம உச்சகாலமாகும்.

கணித முறைகள்: (படம் விளக்கம்)
1. இராசிக்கு எட்டாம் இடம்
ஒருவரின் பிறந்த இராசிக்கு எட்டாம் இராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும். இந்த முறைதான் நாள்காட்டி மற்றும் பஞ்சாங்கத்தில் இடம் பெறுகிறது. இதை மிக எளிதாக கணக்கிடமுடியும்

2.ஜன்ம சந்திர பாகை
பிறந்த காலத்தில் சந்திரன் நின்ற பாகையை துவக்க புள்ளியாக வைத்து 210 முதல் 240 வரை சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும். இது மிகச்சரியான மற்றும் துல்லியமானதாகும் ஆயினும் 360 பாகைக்கு தனித்தனியாக அச்சிடவும், இணையத்தில் வெளியிடவும் முடியாது என்பது இந்த முறையின் பின்னடைவாகும்.

மிகமுக்கிய முடிவுகள், திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்திட தினம் குறிக்க “இரண்டாம் முறை” யில் மட்டுமே ஜோதிடர்களின் துணைக்கொண்டு கணக்கிடவேண்டும். இதுவே சரியான முறையாகும்.

சந்திரனின் காரகத்துவம்
வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் நட்சத்திர சிந்தாமணி, குமார சாமியம் (கோசாரபடலம்), கோசார தீபிகை, உத்திரகாலமிருதம் மற்றும் பல சோதிஷ மூலகிரந்த நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவிண்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை.

தீர்வுகள்:
இக்காலத்தில் அமைதியை நாடி பொறுமையுடன் இருக்க வேண்டும். மனஅமைதிக்கு சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்கி, சிவபுராணம் படித்தல் நன்று.

மனதை ஒருமுகப்படுத்தும் யோகா - தியானம் - பிராணாயாமம் போன்ற முறைகளை கடைபிடித்து “ இன்று நாள் முழுவதும் பொறுமை காக்க வேண்டும்” எனும் தீர்மானத்துடன் இருப்பின் தொல்லைகள் குறையும். மிகமுக்கிய பிரச்சனைகள் மேலும் சிக்கலாகாமல் தவிற்கலாம்.

தானம்:
இக்காலத்தில் சந்திரனின் தானியமான அரிசியை ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்யலாம். வெண்ணிற ஆடையை சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களுக்கு தரலாம்.

 

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் - பாலு சரவண சர்மா
Sri Thanigai Panchangam - Prohithar - Tambaram Astrologer
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர்
+91 9840369677 (Contact Time : 13 IST to 20 IST)
| www.prohithar.com | www.thanigaipanchangam.com |