Mercury Transit 9 May 2016 Monday
Chennai Visible Time
Dunmugi Varusha Panchangam
புதன் கோள் சூரிய விட்டம் கடத்தல்
சென்னை நேரம்
துன்முகி வருட பஞ்சாங்கம்

Mercury Transit 9 May 2016 (9.5.2016) Monday - Chennai Visible Time - Dunmugi Varusha Panchangam புதன் கோள் சூரிய விட்டம் கடத்தல் - துன்முகி வருட பஞ்சாங்கம் - சென்னை நேரம்

துன்முகி வருடம், சித்திரை மாதம் 26ம் நாள் (ஆங்கிலம் 9 மே 2016) திங்கள் கிழமை அன்று மாலை 4:40 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரையில் (சுமார் மாலை 6:15) மணி வரை தெரியும். தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த புதன் கோள் சூரிய விட்டம் கடத்தலை தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்து காணலாம்.

வானியில் நிகழ்வு கால அளவு:
இந்த நிகழ்வு மாலை 4:40 மணிக்கு துவங்கி உச்சகட்டமாக இரவு 8:25 மணிக்கு அடைந்து நள்ளிரவு 12:12 மணி அளவில் முடிவடைகிறது. சூரிய அஸ்தமனம் காரணமாக சென்னையில் மாலை மணி 6:15(சுமார்) வரை மட்டுமே இந்த நிகழ்வு தெரியும்.

இந்த நிகழ்வுகாலத்தில் எங்கெல்லாம் சூரியன் தென்படுகிறதோ அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இந்த அதிசய வானியல் நிகழ்வை கண்டு ரசிக்கலாம்.

11.11.2019 அன்று மீண்டும் இந்த வானியல் நிகழ்வு ஏற்படும் ஆனால் சென்னையில் காண இயலாது.

16 ஆண்டுகள் காத்திருந்து 13.11.2032 அன்றுதான் மீண்டு தமிழகம் உட்பட இந்திய துணைக்கண்டத்திலுள்ளவர்கள் புதன் கிரகம் சூரியனை முழுமையாக கடக்கும் (Full Transit of Mercury) வானியல் நிகழ்வை காண இயலும்....!

First external contact (C1) : 
துவக்க நிலை சூரிய வெளி விட்டம் தொடர்பு

16:40:34

First internal contact (C2) : 
துவக்க நிலை சூரிய உள் விட்டம் தொடர்பு

16:43:44

Maximum transit (MAX) : 
உச்சகட்ட சூரிய விட்டகடவு

20:25:32

Second internal contact (C3) : 
முடிவுநிலை சூரிய உள் விட்டம் தொடர்பு

24:08:31

Second external contact (C4) : 
முடிவுநிலை சூரிய வெளிவிட்ட தொடர்பு

24:11:43

சூரிய அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறுபடும். மேலும் சில இடங்களில் கீழ்வானத்தில் வளிமண்டலத்தின் தன்மை காரணமாக ஒளச்சிதறல் ஏற்பட்டு சூரிய அஸ்தமனத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவும் இந்த வானியல் நிகழ்வு சரிவர காண இயலாது. எனவே நிகழ்வு துவங்கியவுடன் காண முயற்சிக்கவும்.

எச்சரிக்கை: பைனாகுலர் மற்றும் வெறும் கண்களால் சூரியனை காண முயலாதீர்கள் இதனால் நிரந்தரமாக பார்வை இழப்பு ஏற்படும்.

இந்த நிகழ்வைகாண தாம்பரம் வானியல் கழகம் தகுந்த ஏற்பாடுகளை செய்யும். ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் இணையத்தில் இதற்கான முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்.


11.11.2019 Mercury Transit
Transit_of_Mercury_November_11_2019_path_across_sun

www.thanigaipanchangam.com