hora - subam - நல்ல நேரம், சுப ஓரை, ஹோரை விளக்கம்

Home சுப ஹோரை விளக்கம் - சுப ஹோரை கணிதம்  

Hora Calculation, ஹோரை, ஓரை நேரம் என்றால் என்ன, சுப ஹோரை, நல்ல நேரம்

ஹோரை கணிதம், விளக்கம்

ஹோரை என்றால் ஒரு நாளை 24 பங்காக பிரித்து அதில் சூரியன் முதலாக 7 தினங்களுக்கும் உரிய கிரகத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஆட்சிகாலமாக நிறுத்தி அதில் சூரியன்,செவ்வாய், சனி ஹோரை காலம் தவிற மற்ற காலங்களை சுபஹோரையாக கொண்டு சுபங்கள் செய்ய மிகவும் உகந்த காலமாக கருதப்படுகிறது. இராகு காலம் எமகண்டம் இருப்பினும் ஹோரை வைத்து சுபங்கள் செய்யலாம்.

ஓரை புவிமைய கோட்பாட்டின்படி கணக்கிடப்படுகிறது . கிரகங்கள் சூரினுக்கும் பூமிக்கும் இடையில் மற்றும் சூரியனுக்கு அப்பால் சுற்றும் கிரகங்கள் எனஇரண்டு நிலையாக பிரிக்கப்படுகிறது. இதில் மெதுவாக சுற்றுவது தொடங்கி வேகமாக சுற்றுவது வரை என கொள்ளப்படுகிறது

உள்கிரகங்கள்
சூரியனை சுற்றினாலும் புவிமைய கோட்பாட்டின்படி சூரியன் பூமியை சுற்றிவருவதாக கருதி சூரியனை முதலாவதாக வைத்து அதிக சுற்று காலம் முதல் குறைந்த காலம் சுழற்சி கொண்ட கிரகங்கள என வரிசைப்படுத்தப்படுகிறது இந்த வகையில்
சூரியன்(365.25 நாள்)
சுக்கிரன் (225 நாள்)
புதன் (88 நாள்)
நிலவு 27 நாள்
என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது
வெளிகிரகங்கள்:
பூமிக்கு அப்பால் சூரியனை மையமாக சுற்றும் கிரகங்களை அதிககாலம் சுற்றும் கிரகம் துவங்கி
சனி(29 வருடங்கள்)
குரு 12 வருடங்கள்)
செவ்வாய் (687 நாட்கள்)
என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஹோரை என்பது ஒருநாளைக்கு 24 பங்காக பிரித்து அன்றைய கிழமையின் கிரகத்தை சூரிய உதயம் முதலாவதாக கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஹோரை என வரிசையாக சுழற்சி முறையில் கணக்கிடவேண்டும். இந்த ஹோரையே மேலைநாட்டில் மறுவி ஹவர்(மணி) என்று கடைபிடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபஹோரைகள்: சுக்கிரன், புதன், சந்திரன், குரு ஆகிய நான்கு ஹோரை காலங்கள் சுபங்கள் செய்ய உகந்ததாகும்.

அசுப ஹோரைகள்: சூரியன், சனி, செவ்வாய் ஹோரைகளில் சுபங்கள் தவிற்பது நல்லது.

திருமணம், கிரகப்பிரவேசம், சாந்தி முகூர்த்தங்களில் லக்னத்திற்கு அடுத்து சுபஹோரை நேரம் மிகமுக்கியமானதாகும்.

இங்கு இந்து முறைப்படி ஹோரை அட்டவணை தரப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆங்கில முறை (Mid Night to Mid Night) கிழமை அடிப்படையில் இந்து முறை கிழமை பின்னணியில் ஹோரை காலம் தரப்பட்டு்ள்ளது

சூரிய உதயம்:
சூரிய உதயம் இடத்திற்கு இடம் மாறுபடும் எனவே சூரிய உதயம் அறிந்து உதயம் முதல் ஒருமணி நேரத்திற்கு ஒரு ஹோரை என கொள்ளவும். இங்கு சென்னை சூரிய உதயம் ஆங்கில தேதி அடிப்படையில் தரப்படுள்ளது இதை அப்படியே பயன்படுத்தலாம்.(சில விநாடிகள் மட்டுமே மாற்றம் இருக்கும்)

சென்னை தினசரி சூரிய உதயம் அட்டவனை

குறிப்பு: ஒரு நாள் என்பது கடிகார மணியில் 24 மணி நேரமாகும் ஆனால் நிஜமாக ஒரு நாள் என்பது சூரிய நாள்(Solar Noon Day) நடசத்திர பின்னணி (Sidereal Day) நாள் என வகைப்படுத்தப்படுகிறது. இது 24 மணி நேரத்திற்கு 21 விநாடிகள் குறைவானதாக அல்லது 29 விநாடிகள் கூடுதலாக இருக்கும். நட்சத்திர பின்னணி சராசரி நேரம் 23 மணி 56 நிமி 4.0916 விநாடி . மேலும் இந்த கால அளவுகள் சூரிய அன்மை, தொலைவு நிலையில் மாறுதலுக்குட்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஹோரை- ஓரை கிரக வரிசை, சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய்

எளிதாக நினைவுபடுத்த " சூரி - சுக் - புத - சந் - சனி - குரு - செவ்" என நினைவில் கொள்ளவும்.


ஆங்கில கிழமைப்படி ஹோரை

ஆங்கில கிழமைப்படி ஹோரை காலம், நேரம், சுபவேளை, சுபகாலம். சுபநேரம்

இந்து முறைப்படி ஹோரை

ஹோரை, ஓரை, நல்ல .நேரம், சுகவேளை, சுபகாலம்

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், காப்புரிமை, பதிப்புரிமை காப்பிரைட் எச்சரிக்கை: இங்கு இடம் பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் "ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்" வெளியீட்டாளர்களுக்கு உரிமையானது. இந்த தகவல் மற்றும் படங்களை வேறு இணையதளத்தில் பயன்படுத்த அனுமதி இல்லை

Sri Thanigai Panchangam ஸ்ரீதணிகை திருக்கணித பஞ்சாங்கம்

பாலு சரவண சர்மா , பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர்
Balu Saravana Sarma - Tambaram Astrologer, +98403 69677, prohithar@gmail.com
www.prohithar.com | www.thanigaipanchangam.com