புதியவை

தமிழ் பஞ்சாங்கம் Vijaya (2013-14)Varusham Tamil Panchangm Download
தமிழ் பஞ்சாங்கம் ஸ்ரீ விஜய(2013-14) வருட திருக்கணித பஞ்சாங்கம்

Vijya Varuhsa Suba Muhurtha dinam (Drik & Vakya)
விஜய வருட சுபமுகூர்த்த நாட்கள் (திருக்கணிதம் & வாக்கியம்)

தமிழ்

சூரிய - ஆரியபட்டீயம் சித்தாந்தம்

என்னற்ற சித்தாந்தங்களும் அதை பயன்படுத்தும் கணித முறை(கரணங்)கள் உருவாக்கப்பட்டன. அந்த பாரம்பரிய வழியில் (தற்கால)சூரிய சித்தாந்தம் மற்றும் ஆரியபட்டியம் சித்தாந்தம் பயன்படுத்தப்படுகிறது. பாரத வானசாஸ்திர விஞ்ஞானி ஆரியபட்டரின் "ஆரியபட்டியம்" சித்தாந்தத்தை ஒட்டி ஹரிதத்தர் அவர்களால் பரஹிதம், வரருசி அவர்களால் வாக்கியகரணமும் உருவாகின.

இவைகள் தொலைநோக்கி இல்லாத காலத்தில் வெறும் கண்களால் பார்த்து கணித்து தொடர்ந்து கிரகநிலை கணிக்க நிலையான கணிதசூத்திரங்கள் உருவாக்கப்பட்டன (கணித முறைகளில் மிகவும் மேம்பாடனவை)

இந்த சூத்திரங்கள் பலநூறு ஆண்டுகளாக உண்மை கிரக நிலையுடன் ஒப்பிட்டு திருத்தம் இன்றி அப்படியே பயன்படுத்துவதால் இந்த சித்தாந்தங்களினால் கணிக்கப்படும் பஞ்சாங்க தகவல்கள் உண்மையான கிரக நிலையிலிருந்து வேறுபட்டு பிழையான பஞ்சாங்க தகவல்களுடன் காணப்படுகிறது . கிரக வக்கிரம், அதி வக்கிரம் போன்றவை இந்த முறையில் துல்லியமாக கணிக்க இயலாத ஒன்று. தற்பொழுதைய நிலையில் இந்த சித்தாந்தங்களால் சூரிய கிரஹணம் கணிப்பது மிகவும் கடிணம்.

பின்னாளில் வருபவர்கள் கண்களால் பார்த்து பிழை திருத்தம் செய்யவேண்டும் என்று இந்த சித்தாந்தத்திலேய வலியுறுத்தப்பட்டிருந்தும் இன்றுவரை யாரும் திருத்தம் செய்ய முன்வரவில்லை என்பதுதான் உண்மை !

இது தொடர்பாக கணிதவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்ததில் என்ன திருத்தம் செய்தாலும் இக்காலகட்டத்திற்கு வாக்கிய பஞ்சாங்க சூத்திரங்கள் பொருத்தமற்றது மற்றும் துல்லியமற்றது என்று கூறுகிறார்கள்.

அமாவாசை, கிரகணம், பௌர்ணமி ஆகிய இந்த மூன்று மிகமுக்கியமான வானநிகழ்வுகள் மேற்படி வாக்கிய சித்தாந்த பஞ்சாங்கத்தின் பிழைகளை மிகத்தெளிவாக காட்டுகிறது. மிக குறைந்த அளவில் வட இந்தியாவில் சூரியசித்தாந்தமும், தமிழ் நாட்டில் வாக்கிய முறையும் பயன்படுத்தப்படுகிறது

பிழைகள் காரணமாகவும் உண்மையான வானசாஸ்திர தகவல்களுக்கு மாறுபட்டும் இருப்பதால் வாக்கிய மற்றும் சூரிய சித்தாந்த பஞ்சாங்கங்களை இன்று பெரும்பாலான மக்கள் புறக்கணித்துவிட்டனர்.

குறிப்பாக சங்கரமடங்கள், கிரஹண முரன்பாட்டிற்கு பின்னர் திருப்பதி தேவஸ்தானம் முதலிய வழிபாட்டு ஸ்தலங்கள் வாக்கிய முறைகளை கைவிட்டு அறிவியல் பூர்வமான திருக்கணித முறைக்கு மாற்றிக்கொண்டுள்ளன

வாக்கியத்தில் கிரக நிலைகள் ஒரு சூத்திர முடிவில் இருந்து மற்ற முடிவிற்கும் இடைப்பட்ட தினங்களில் கோள திரிகோண முறை (spherical Trigonometry) பயன்படுத்தாமல் சராசரி (Mean Value) முறையில் மட்டும் கிரக நிலை கணிக்கப்படுகிறது இது கிட்டத்தட்ட 1% பிழைகள் வரை ஏற்படும் அதனால்தான் உண்மையான குரு, சனி பெயர்ச்சிக்கும் வாக்கிய பெயர்ச்சிக்கும் இடைவெளி இருக்கிறது ! ஜெய வருட பஞ்சாங்கம், Jaya Varusha Tamil Panchangam 2014-2015, திருக்கணிதம், வாக்கியம்